திருவாரூர் தொகுதியில் பத்து கிலோமீட்டருக்கு மஜக வாகன பேரணி …. பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பரப்புரை..!


மார்ச்.31,

இன்று திருவாரூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக உதயசூரியனில்  போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

முன்னதாக அத்திக்கடை தொடங்கி கூத்தாநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், ஏராளமான இதர வாகனங்களிலும் மஜகவினர் கொடிகளுடன் ஆர்ப்பரித்து பொதுச் செயலாளரை பரப்புரைக்கு அழைத்து சென்றனர்.

அத்திக்கடை, கூத்தாநல்லூர் பகுதிகளில் நுழைந்த போது மஜக வாழ்க என்ற முழக்கங்கள் அதிர்ந்தது. பெண்கள் வெளியே வந்து கையசைத்து வரவேற்பளித்தனர்.

மஜக வின் தியாகப்பூர்வ முடிவை ஆதரித்து பொதுமக்கள் பொதுச் செயலாளருக்கு சால்வை அணித்து , கைக் கொடுத்து வாழ்த்து கூறினர்.

கூத்தாநல்லூரில், சிறந்த தொரு தலைவர் என சமூக ஆர்வலர்கள், சான்றோர்கள், ஜமாத்தினர் கைக் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வழியெங்கும் பல இடங்களில் ஜீப்பில் நின்றவாரே திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நாகை முபாரக் தொடர் பரப்புரை மேற்கொண்டு வந்தார்.

டெல்டா வின் மஜக கோட்டைகளில் ஒன்றான இங்கு வாகன பேரணியை மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் ஆகியோர் திறம்பட வழி நடத்தினர்.

இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி மாவட்ட அணி நிர்வாகிகள் அத்திகடை லியாக்கத் அலி, அடியற்கை நிஜாம், திருவாரூர் சித்தீக், ஒன்றிய செயலாளர்கள், கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள், மற்றும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிளை மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#திருவாரூர்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021