ஜெயலலிதா அம்மையார் பாராட்டு பெற்ற ஒரே MLA தான் TRBராஜா! பொதக்குடியில் மு தமிமுன் அன்சாரி MLA பரப்புரை!


மார்ச்.31,
மன்னார்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் TRB ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

மஜகவின் கோட்டைகளில் ஒன்றான பொதக்குடியில் பிரமாண்ட இரு சக்கர வாகன பரப்புரை நடைப்பெற்றது. 200-க்கும் அதிகமான மோட்டார் பைக்குகளில் கொடிகளுடன் மஜகவினர் திரண்டு வந்தனர்.

அங்கு பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் நானும், ராஜாவும் நெருங்கிய நண்பர்களாக அரசியலை தாண்டி பழகி வந்தோம் என்றார்.

ஒரு நாள் சபையில் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் இருந்த போது, அப்போது TRB. ராஜா அவர்கள் ‘மேம்’ என்று அவரை மரியாதையுடன் பேசினார். உடனே அவர் எழுத்து ‘மை டியர் யங் MLA’ என்று அன்புடன் குறிப்பிட்டு பேசினார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.

இப்படி முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களால் பாராட்டுப் பெற்ற ஒரே எதிர்கட்சி திமுக MLA இவர் மட்டும் தான் என்று பலத்த கரவொலிக்கு இடையே பரப்புரை செய்தார். அவருக்கு உதய சூரியனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதில் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நாகை முபாரக், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், துணைச் செயலாளர் நத்தர் கனி மாவட்ட அணி நிர்வாகிகள் அத்திகடை லியாக்கத் அலி, அடியற்கை நிஜாம், திருவாரூர் சித்தீக், ஒன்றிய செயலாளர்கள், கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள், மற்றும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிளை மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#மன்னார்குடி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021