
திருச்சி.மார்ச்,31.,
நேற்று திருச்சி வந்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சார்பில் பாராட்டும், வரவேற்பும் அளிக்கப்பட்டது.
உழவர் சந்தை அருகில் உள்ள ஜெனரல் பஜார் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜமாத்துல் உலமா மாவட்ட தலைவர் இனாமுல் உசேன் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று பேசினார்.
மக்கள் நன்மைக்காக பதவிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்கை அடிப்படையில் மஜக முடிவெடுத்தது ஒரு முன்மாதிரி அரசியல் தியாகம் என்றும், நடப்பு MLA பதவியையும் இழந்தது சாதாரண விசியமல்ல என்றும் அவர் பாராட்டினார்.
சலாம் ஹஜ்ரத் பேசும் போது, உலமாக்கள் மற்றும் தமிழக மக்களுக்காக அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளை நினைவு கூறினார்.
பின்னர் அப்பள்ளி ஜமாத் சார்பில் பாராட்டு தெரிவித்து சால்வை அணிந்தனர்.
அதை தொடர்ந்து காதர் மஸ்ஜிதில் அப்பள்ளி ஜமாத் சார்பில் பாராட்டு, வரவேற்பும் அளிக்கப்பட்டது அங்கு மதிய (லுஹர்) தொழுகைக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வில் பொதுச்செயலாளர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
மஜகவின் முடிவு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும் ஜமாத் நிர்வாகிகள் மனம் திறந்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாநிலச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, தர்கா பாரூக், சேக் அப்துல்லாஹ், முகம்மது பீர்ஷா மற்றும் நிர்வாகிகள் சேக் தாவூத், அன்வர்தீன், சையது, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#திருச்சி_மண்டலம்
30.03.2021