பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் கலந்துகொண்டு கண்டன உரை..!

சென்னை.செப்.10., ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பாசிச பிஜேபி மோடி அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (10.09.2018) மாலை 5.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.

இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ஜனநாயகத்திற்கு எதிரான கொள்கைகளை நிறைவேற்றுவதும், மக்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் வைகையிலும், தொடர்ந்து எழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாசிச பாஜக அரசை கூடியவிரையில் தேர்தலில் தோற்க்கடித்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று கண்டன உரை நிகழ்த்தினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா , ஜே.சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் மாநில தலைவர் பம்மல் சலீம், மாநில பொருளாளர் முஹம்மது இக்பால்,
மனித உரிமை அணி மாநில செயலாளர் சிந்தா மதார், மாநில கொள்கை விளக்க பேச்சாளர் குணங்குடி மீரான்,

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட பொருளாளர் அமிர் அப்பாஸ் , மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவூப் ரஹீம் , பீர் முஹம்மது ,

வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அன்வர் , மாவட்ட பொருளாளர் அக்பர் ,

மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வில்லிவாக்கம் சாகுல், மாவட்ட இளைஞரணி செயலாளர் கனி,

தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம் , துணைச் செயலாளர்கள் ராஜா முஹம்மது , ஸ்டிபன், இளைஞரணி செயலாளர் ஷேக் மதார், வர்த்தக அணி செயலாளர் அம்ஜத் கான், தொழிலாளர் அணி செயலாளர் முஹம்மது அலி ,

தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அப்துல் காதர் , துணைச் செயலாளர் அப்துல் வசீம் ,

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் ,

காஞ்சி வடக்கு பொறுப்புக் குழு தலைவர் முஹம்மது யாகூப் , பொறுப்புக்குழு உறுப்பினர் தாம்பரம் ஜாகிர் , கண்டோன்மெண்ட் சுல்தான் ,

மஜக சென்னை, காஞ்சி மாவட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் மஜக சார்பில்
கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு