You are here

மஜக இல்ல நலன் விசாரிப்புகள்

திருவாரூர் மாவட்ட மஜக செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு தேறி வருகிறார்.

கூத்தாநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நலம் விசாரித்தார்.

அதுபோல் மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி அவர்கள் இதய சிகிச்சை எடுத்துள்ளார்.

பொதக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று பொதுச் செயலாளர் நலம் விசாரித்தார்.

இந்நிகழ்வுகளில் துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

Top