IKP மதினா கிளை ஆலோசனைக் கூட்டம்…

சௌதி அரேபியா ஜித்தா மண்டலம் மதினா கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனைகூட்டம்
கடந்த 24-03-2017 வெள்ளிக் கிழைமையன்று  நடைபைற்றது.

சகோதரர் ஆரிப் சுல்தான் அவர்களின் தலைமையில் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

#தீர்மானம்_01
இஸ்லாமிய கலாச்சார பேரவை மதினா மாநகர கிளை ஜித்தா மண்டலத்தின் நிர்வாக்கத்தின் கீழ் செயல்படுவதாக நிறைவேற்றப்பட்டது.

#தீர்மானம்_02

மதினா மாநகரம் கீழ் பல்வேறு கிளைகள் திறப்பதற்க்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#தீர்மானம்_03

வாரந்தோரும் சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடத்துவது என நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக கிளை செயலாளர் #முஹம்மது_ஜலில் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்வு நிறைவுப்பெற்றது.

இவண் ;
தகவல் தொழில் நூட்பஅணி,
இஸ்லாமிய கலாச்சார பேரவை,
ஜித்தா மண்டலம்.
#IT_WING_JIDDAH