முத்துப்பேட்டை நகர மஜக ஆலோசனை கூட்டம்…

image

image

திருவாரூர்.ஏப்.04., முத்துப்பேட்டை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் 03/04/2017 அன்று முன்னால் நகர செயலாளர் முகம்மது மைனுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து மற்றும் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது…

பொறுப்பாளர்கள்

நகர செயலாளர்
நைனா மொஹம்மத்
8012053383

நகர பொருளாளர்
முகம்மது இத்ரீஸ்
8438337003

நகர துணை செயலாளர்
முகம்மது அசாருதீன்
9944773658

கமால் நாசர் 9566356063

அஜீஸ் ரஹ்மான் 9677327076

ஆகியோரை முத்துப்பேட்டை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. முத்துப்பேட்டை பகுதியில் கேஸ் விநியோகம் செய்யும் நபர்கள், கொடுக்கப்படுகின்ற ரசீதுக்கு மேல் பணம் வாங்குவதால் அதற்கு உண்டான அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட வேண்டும் என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. முத்துப்பேட்டை நகரத்தில் பிரமாண்டமான முறையில் மிகப்பெரிய பொது கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் அதில் மாநில பொது செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் இருவரையும் வைத்து நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறவேற்றப்பட்டது.

3. கோடைக்காலமாக இருப்பதால் தலைமையின் அறிவிப்பின் படி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரு நபர்களை மட்டும் போட்டியிட வைத்து அவர்களை பெருவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
திருவாரூர் மாவட்டம்.
#ⓂJK_IT_WING
04-04-2017