சமூகத்தை அறிவு மயப்படுத்த வேண்டும்! அத்திக்கடையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி பேச்சு…!

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் அரசுப் பணிகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

TNPSC, TNUSRB, TNFUSRC, IAS, IPS தேர்வுகளை மையமாக கொண்டு நடைப்பெற்ற நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது…

1990-க்குப் பிறகு கல்விக்கற்ற ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம்.

பெண்களும் உயர் கல்வியை பெற்றிருக்கிறார்கள்.

அவர்களை தாயகத்தில் அரசுப் பணிகளில் அமர்த்திடும் நோக்கில் இந்நிகழ்வு அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நேர்மையான நீதிபதிகள், சிறந்த வழக்கறிஞர்கள், வரலாற்று நிபுணர்கள், IAS, IPS அதிகாரிகள் மற்றும் RDO, VAO போன்ற அரசு ஊழியர்களாக புதிய தலைமுறையினரை உருவாக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என கூற முடியாது.

ஆனால் நமது அறிவை, ஆற்றலை, ஆளுமையை தாய் மண்ணிலும் வெளிப்படுத்த வேண்டும்.

ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அமைய, நல்ல எண்ணம் கொண்டவர்கள் நிர்வாக பணிகளுக்கு வர வேண்டும்.

இந்த கனவுகளுடன் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.

சமூகத்தை அறிவுமயப்படுத்த வேண்டும்.

பல சமூக உறவுகளை வளர்த்தல், அமைதி பரவ உழைத்தல், நேர்மைக்கு துணை புரிதல் போன்ற உயர்ந்த லட்சியங்களோடு இளைய தலைமுறை வளர வேண்டும்.

அதுவே இன்றைய தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வக்பு வாரிய வழிகாட்டலுடன் ஜமாத், KEO ,EDEC, PEA போன்ற தன்னார்வ குழுக்களும் இணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜமாத் குழு தலைவர் S.H. அக்பர் அலி, அத்திக்கடை ஜமாத் தலைவர் AA அப்துல் முகம்மது, மதர் இந்தியா முதல்வர் M.சுப்ரமணியன், K. M. அமீர், K. நூர் முகம்மது,பொதக்குடி நவபாரத் பள்ளி தாளாளர் TA ஹாஜா பகுருதீன், அரசு பள்ளி தலைமையாசிரியர் R.ரவிச்சந்திரன், ஆடிட்டர் N. முஹம்மது சுலைமான், வாழச்சேரி OMD பள்ளி முதல்வர் S.மகேந்திரன்,AK.ரிஸ்வான் முகம்மது ஆகியோர் பங்கேற்றனர்.

மஜக துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன் மற்றும் அத்திக்கடை நிர்வாகிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.