You are here

பழனியில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் பாசிசத்திற்கு எதிரான கட்சிகளுடன் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மஜக பங்கேற்பு..!

image

image

திண்டுக்கல்.ஜூலை.02.,
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் விவசாயத்திற்காக மாடுகளை வாங்கி சென்ற துரை மற்றும் செந்தில் இவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய மதவெறி பிடித்த VHP, RSS, இந்து முன்னணி, சிவசேனா, பா.ஜ.க, ஆகிய பாசிசவாதிகளை கண்டித்து பழனி டவுன் முஸ்லிம் தர்மபரிபாலனச் சங்கம் தலைமையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் மற்றும்

விடுதலை சிறுத்தைகள், DYFI, இந்திய குடியரசு கட்சி, தே.மு.தி.க, CPM, CPI,  நாம் தமிழர் கட்சி,  தமிழர் தேசிய முன்னணி, தா.ம.க, ம.தி.மு.க, காங்கிரஸ், தி.மு.க, திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம், தமிழ் புலிகள், நீலப்புலிகள், அனைத்து ஜமாத்தார்களும் மற்றும் அனைத்து விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும், பாசிச எதிர்ப்பாளர்களும், பொதுமக்களும், மாடு வியாபாரிகளும் இந்த பாசிச எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபீபுல்லா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுத்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில்
திருப்பூர் மாவட்ட செயலாளர்.
ஹைதர்அலி கண்டன உரையாற்றினார்.

தகவல்:

தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
மனிதநேய ஜனநாயக கட்சி.
திண்டுக்கல் மாவட்டம்.
2.7.2017