மல்லிப்பட்டினத்தில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக ஆர்ப்பாட்டம்! மாநில பொருளாளர் SS ஹாரூன்ரசீது மற்றும் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு !


அக்.06,

தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மஜக சார்பில் வேளாண் கருப்புச் சட்டங்களை திரும்ப பெற கோரியும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்து உரிய நீதி வேண்டியும், உ.பியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை சேக் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்களும், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இதில் திமுக செயலர் ஹபீப் முகம்மது, தவாக மாவட்ட செயலர் பஷீர் அஹமது, MKPஅமீரக பொறுப்பாளர் அஷ்ரப்,  மாவட்ட  பொறுப்பு குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மல்லிப்பட்டினம் நிர்வாகிகள் ஹுமாயூன் கபீர், முஹம்மது ஜுனைது, சேக்காதி, தப்தஹீர், அதிரை நிர்வாகிகள் அப்துல் சமது, அஷ்ரப், புதுப்பட்டினம் நகர செயலர் ஜெகபர் சாதிக், சேதுபாவா சத்திரம் நகர செயலர் சலிம் மற்றும் ஆலிம், நூருல்அமீன் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
05/10/2020