கதிராமங்கலம் பிரச்சனையை முன்னெடுப்போம்…! சட்டமன்ற வளாகத்தில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், கவுதமன் பேட்டி!

சென்னை.ஜூலை.03., கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு  எதிராக இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவைக்கு அப்போது வரவில்லை.

இந்நிலையில் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் எழுந்து நின்று சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டனர் அனால் சபாநாயகர் நாளை பேசுங்கள் என்றார்.

இந்நிலையில் கதிராமங்கலத்தில் நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து முதல்வரின் பதில் திருப்திகரமாக இல்லாததால், இது குறித்து தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சட்டசபை வளாகத்தில் சந்தித்தனர்.

அப்போது போராட்டக்குழுவின் சார்பில் இயக்குனர் கெளதமன், தோழர் சரவணராஜன் ஆகியோரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

கதிராமங்கலத்தில் என்ன நடைபெற்றது என்று அரசு விளக்க வேண்டும் என்று கோரினர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
சட்டமன்ற வளாக செய்தி குழு,
சென்னை.
03.07.2017