நாகை. டிச.10., நாகை நம்பியார் நகரை சேர்ந்த 11மீனவர்களும், நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஒரு மீனவரும் குமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கி காணாமல் போய்விட்டனர்.
கடந்த டிசம்பர் 7ஆம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வரையும் , மீன்வளத்துறை அமைச்ச்ர் திரு,ஜெயக்குமாரையும் நேரில் சந்தித்து #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முறையிட்டார்கள்.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி முதல் நாகையை சேர்ந்த 12 மீனவர்களையும் மீட்டுதர கோரி நம்பியார் நகரில் மீனவ மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இன்று காலை 10 மணிக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது மீனவ பெண்கள் MLA அவரகளின் கரத்தை பற்றிப்பிடித்து கதறி அழுதனர். அவர்களிடம் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து பேசிவருவதாக MLA கூறினார்.
பிறகு, மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார். நாளை கன்னியாகுமரிக்கு செல்வதாகவும் அங்கு பேரிடர் மீட்பு குழுவிடம் இது குறித்து பேசுவதாகவும் கூறினார்.
பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் MLA பேசும் போது, மத்திய மாநில அரசுகள் கடலில் 500 கி.மீ தூரத்திற்கு தேடுதல் வேட்டை நடத்த வேண்டுமென்றும், மீட்பு பணியில் மீனவர்களையும் இணைத்து ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
10.12.17