ஹஜ் பயணிகளுக்கு சென்னையிலிருந்தே நேரடி விமான சேவை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!


தமிழக முதல்வர் அவர்களுக்கு ஹஜ் விமான பயண சேவை தொடர்பாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…

தமிழகத்தை சேர்ந்த புனித ஹஜ் பயணிகள் கொச்சின் வழியாக விமானப் பயணம் செய்ய வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.

இந்தியாவில் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். மேலும் தென்னிந்தியாவின் முக்கிய நகரமாகவும் சென்னை திகழ்கிறது. இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் வகையில் இவ்வாறு முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே இது தமிழகத்தை சேர்ந்த புனித ஹஜ் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், தாங்கள் இதில் கவனமெடுத்து, வழக்கம் போல் சென்னையிலிருந்து ஹஜ் விமானம் புறப்பட மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஹஜ் பயணிகள் வருமான வரி கட்ட வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு ரத்து செய்யவும் தாங்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் இதற்கு தாங்கள் உரிய முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாவும் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
16-11-2020