மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் விதிவிலக்கு வேண்டும்! நெல்லை மஜக அலுவலகத்தை திறந்துவைத்து பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!


நவம்பர் 18

இன்று நெல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வண்ணாரப்பேட்டை பகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.

மாவட்ட செயலளார் நிஜாம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அலுவலக திறப்புக்கு பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பொதுச் செயலாளர் பேசினார். அப்போது கூறியதாவது…

மருத்துவ மேற்படிப்பில் மத்திய அரசின் ஜிப்மர் , எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகளை தனியாக நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது.

அனைத்து மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வுதான் எனக் கூறிய மத்திய அரசு இப்போது இவ்வாறு கூறியிருப்பது விநோதமாக இருக்கிறது.

எனவே தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு விதிவிலக்கை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.

கேந்திரிய வித்யாலயாவில் தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கி செம்மொழிக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உச்ச நீதிமன்ற கருத்தின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததிராயின் புத்தகத்தில் உள்ள பகுதிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என கல்வி சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை பல்கலைக்கழகம் ஏற்க வேண்டும்.

சிறுவர் சிறுமிகளை சீரழிக்கும் Free Fire என்ற ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவ மழையை வீணாக்காமல் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கு பயன் படுத்தும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.

பிறகு மாவட்ட அலுவலகத்தை சுற்றி பார்த்து, சிறப்பாக இருப்பதாக பாராட்டிய அவர், இதில் ஒரு அறையில் நூலகம் அமைக்க வேண்டும் என மாவட்ட செயலாளரிடம் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா,தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், காஞ்சி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஜிந்தா மதார், மாவட்ட துணை செயலாளர்கள் இரா.முத்துகுமார், A1 மைதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் கே.முருகேசன், நெல்லை ஜாஹீர், புகாரி,கலில், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், MJTS மாவட்ட செயலாளர் ஹபிபுல்லாஹ், பேட்டை நகர செயலாளர் IT சங்கர், பொருளாளர் ஹசன் கனி, துணை செயலாளர்கள் சம்சுதீன், இஸ்மாயில், பாளை நகர செயலாளர் சேக் அப்துல்லாஹ் , பொருளாளர் மைதீன், துணை செயலாளர் பீர் மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
18.11.2020