பெங்களூரு.டிச.10., இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் மே17 இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் ” தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் ” என்ற தலைப்பில் அரங்க கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) கர்நாடக மாநிலம் பெங்களூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் கலந்து கொண்ட மஜக பெங்களூரு மாநகர் செயலாளர் KMJ. பாபு அவர்கள் தோழர். திருமுகன் காந்தி அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்தினார்.
இந்நிகழ்வில் மாநகர் பொருளாளர் J.சல்மான், துணை செயலாளர் A.அக்கீம் சேட், தகவல் தொழில்நுட்ப செயலாளர் தன்வீர், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அந்தோனி தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK_KARNATAKA