மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஹாஜா சலிம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நாகை. முபாரக் அவர்கள் கலந்து கொண்டு தலைமை சார்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முன்னெடுக்கப்படும் “மக்களுடன் மஜக” என்ற இச்செயல் திட்டத்தை விலக்கி ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் “மக்களுடன் மஜக” என்னும் செயல்திட்ட வாகன விளம்பர ஸ்டிக்கர் பரப்புரையை தொடங்கிவைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரியாசுதீன், புருனை மண்டல நிர்வாகி ஹாஜி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயளாலர் நீடூர் குர்ஷித் கான், நீடூர் நெய்வாசல் நகர நிர்வாகிகள், அப்துல் மாலிக், இப்ராஹிம், ஹனிபா, அக்பர், பஹத் ஆகியோர் கலந்து கொண்டனர்.