திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று (23.12.2022) மாவட்ட செயலாளர் P.M.இக்பால் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் கோவை M.H.ஜாபர் அலி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு, தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் மஜக” செயல் திட்ட பணியை மாவட்ட, பகுதிகளில் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக், ஈஸ்வரன், மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் அசார்தீன், மாணவர் இந்திய பொருளாளர் ஆஷிக் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.