You are here

போர்கள் அற்ற புது உலகம் காண்போம்! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி!

உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் கிறிஸ்துமஸ் முதன்மையானதாக உள்ளது.

அன்பையும், கருணையையும் முன்னிறுத்தி கிருஸ்தவ பெருமக்கள் உலகமெங்கும் ஆற்றி வரும் சேவைகள் உன்னதமானவை.

இந்திய திருநாட்டில் உயர்ரக கல்வி மையங்களும், தரமான மருத்துவமனைகளும், நல் வசதிகளை அளிக்கும் சேவை இல்லங்களும் அவர்களால் நடத்தப்படுபவை என்பது ஒரு சிறப்பாகும்.

இந்திய நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

போர்கள் அற்ற புது உலகை காணவும், அமைதியை நிலை நாட்டவும் எல்லோரும் இந்நன்னாளில் உறுதியேற்போம்!

Top