
பிப்.12.,நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாகை நகராட்சியின் 29 வது வார்டில் மஜக வேட்பாளர் M.ஜென்னத் பேகம் அவர்களுக்கு தண்ணீர் குழாய் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வுடன் வாக்கு சேகரித்தார்.
நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது மாவட்ட பொருளாளர் சதக்கதுல்லா, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
15.02.2022