
பிப்.11.,நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் கன்னியாகுமாரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநகராட்சி வார்டு 39, மற்றும் 42,ல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அது தொடர்பான கள ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் காயல் சாகுல் ஹமீது, அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் வியூகம், வெற்றி வாய்ப்பு, பிரச்சார பணிகள் குறித்தும், நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அமீர் கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்ரப் அலி, மாநகர செயலாளர் மஹீன் இப்ராஹிம், மாநகர துணை செயலாளர் பைசல் மற்றும் 42 வார்டு வேட்பாளரும் மாவட்ட துணை செயலாளருமான முஜீப் ரகுமான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கன்னியாகுமரி_மாவட்டம்
11.02.2022