கத்தார். ஆக.22., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலரம் சார்பாக 75ஆம் ஆண்டு “சுதந்திர தின” பவளவிழா Zoom காணோலி நிகழ்ச்சி கடந்த 20.08.21 வெள்ளிக்கிழமை கத்தார் நேரப்படி மாலை 6.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் நடைபெற்றது.
ஜலாலுதீன் இம்தாதி அவர்கள் பாடிய சுதந்திர தின தியாக பாடலுடன் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கமாக கத்தார் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அகமது அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.
மண்டல துணைச்செயலாளர் பரங்கிபேட்டை அப்துல் ரசாக் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் வரவேற்புரை வழங்கினார்.
அதனை தொடந்து முன்னால் துணைச்செயலாளர் புதுமடம் பைசல் அவர்கள் கத்தார் மண்டல செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு சிறப்பாக அறிமுக உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA, Ex. MLA அவர்கள் கலந்துக்கொண்டு “பாசிசமும் சுதந்திர” போராட்டமும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் “சுதந்திர போரில் திப்புசுல்த்தான்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
கீழக்கரை ஹுசைன் மற்றும் உத்தமபாளையம் உவைஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மண்டல துணைச்செயலாளர்கள்.
சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிபேட்டை அப்துல் ரசாக், மேலப்பாளையம் அல் பத்தாஹ், பரங்கிபேட்டை பாருக் மற்றும் மண்டல IT Wing செயலாளர். மேலப்பாளையம் ஜுபைர், மக்கள் தொடர்பு செயலாளர் மேலப்பாளையம் இக்பால், கொள்கைபரப்பு செயலாளர் அத்திக்கடை பாருக், கருப்பூர் உபைஸ், கருப்பூர் யாசர் மற்றும் கடலங்குடி ஆசிக்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நம் அழைப்பை ஏற்று குவைத், சவுதி, அமீரக நிர்வாகிகள் மற்றும் தாயகத்தில் இருந்தும் மலேசியா புருனை ஆகிய நாடுகளில் இருந்தும்.முன்னால் ICC president திருமதி மிலன் அருன்.கத்தார் தமிழ்சங்கம் நிர்வாகிகள், சகாபாக்கள் நூலகத்தின் நிர்வாகிகள் மற்றும் கத்தாரின் ஏனைய அமைப்பினர் மற்றும் ஜமாத்தார்கள் திரலாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக மண்டல துணைச்செயலாளர் திருச்சி நஜிர் பாட்ஷா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்…
தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#கத்தார்_மண்டலம்
20.08.21