அக்.02,
விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் அடிமையாக்குகின்ற மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முத்துப்பேட்டை நகர மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் பால்கார மைதீன் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் இராவுத்தர் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் பேராவூரணி சலாம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் பஷீர் அலி, ஷாஜகான், அசாருதீன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அப்துல் மாலிக் கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதில் மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.
MJTS நகர செயலாளர் அஹமது ஆதில் நன்றி கூறினார்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #முத்துப்பேட்டை_பேரூர்
#திருவாரூர்_மாவட்டம்.