அறந்தாங்கியில் வேளாண் உபகரணங்களுடன் திரண்டு மஜகவினர் ஆர்ப்பாட்டம்.!


அக்.02,
மத்திய பாஜக அரசின் வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து புதுகை கிழக்கு மஜக சார்பில் அறந்தாங்கியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த மஜகவினர் பச்சை முண்டாசுடன் கைகளில் மண்வெட்டி, கலப்பையுடன் திரண்டு ஆர்ப்பரித்தனர்.

மஜக மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் காதர் பாட்சா, மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட விவசாய சங்க செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், துணைச் செயலாளர் சையது அபுதாஹிர் முன்னிலை வகிக்க மா.து.செயலாளர் ஷாஜுதீன் வரவேற்றார்.

இதில் MJTS நிர்வாகிகள் முகம்மது குஞ்சாலி, ஜகுபர் சாதிக், அஜ்மீர் கான், வெள்ளைச்சாமி, அன்சாரி, செய்யது அபுதாகிர், MJVS நிர்வாகிகள் பகுரூதீன், காதர் இப்ராகிம், அணி நிர்வாகிகள் : முகம்மது யாசின், ஷாருக்கான், முகம்மது உமர், சேக் பரீத், வாசிம் அக்ரம், முகம்மது அல்காப், உதயபிரகாஷ், முகம்மது அலியார், ஷாஜஹான், முகம்மது சாலிகு, பிலிக்ஸ் ராஜ், ஆப்தீன், கவியரசன், நிஜாம் மொய்தீன், அப்துல் ஹமீது, சாகுல் அமீது, அபுதாலிபு, அப்துல் அமீது, ஷமீம் முகம்மது, ராஜராஜன், கலந்தர் மைதீன், சதாம் உசேன், அப்துல் ஜலீல், சாகுல் அமீது, மணிகன்டன், சையது அபுதாஹிர் ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆசிக், அப்துல்லாஹ், அஜ்மீர் கான், தாவூத் கனி, அப்துல் கரீம், அப்பாஸ், பாசில், அசார், சோலைமலை, ஜலாலுதீன், முகம்மது உசேன், முகம்மது இர்பான், முகம்மது வாசிப், அனஸ் தாஹா, மனோ உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது நன்றி கூறினார்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.