அக்.02,
கார்ப்பரேட்களிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தாதே வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெறு என்ற கோரிக்கையை முன் வைத்து மயிலாடுதுறையில் முத்து வக்கீல் சாலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் மருத்துவர் சதீஸ் சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மஜக மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன் கண்டன உரையாற்றிட தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார்.
இதில் மு.மாவட்ட நிர்வாகிகள் மிஸ்பாஹுதீன், ஜெப்ருதீன், ஆக்கூர் கிளை பொறுப்பாளர் அமீருல் அஸ்லம் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்று வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் தைக்கால் ஷாஜஹான் நன்றி கூறினார்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.