கும்பகோணத்தில் விவசாயிகள் எழுச்சி! கொட்டும் மழையில் தக்காளி விநியோகித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மஜகவினர் …


அக்.02,

மத்திய அரசு கொண்டு வந்திருக்க கூடிய மூன்று வேளாண் கறுப்பு சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு வாரக்காலம் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தமிழகம் முழுக்க முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று தஞ்சை (வடக்கு) மாவட்டம் கும்பகோணத்தில் மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஒரு வார கால தொடர் போராட்டத்தை முடித்து வைத்தார்.

போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை கொட்ட தொடங்கியது. ஆயினும் பொதுச் செயலாளர் கண்டன உரையை தொடர, கூட்டம் கலையாமல் நின்றது.

முன்னதாக மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் முழக்கங்களை எழுப்ப, கூட்டம் ஆர்ப்பரித்தது.

நிறைவாக விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அங்கு கூடி நின்று ஆதரவளித்த பொதுமக்களுக்கு தக்காளி பைகள் விநியோகிக்கப்பட்டது.

அவற்றை வரிசையில் நின்று பொதுமக்கள் பெற்றுக் கொண்டு போராட்டத்துக்கு வாழ்த்து கூறினர்.

விவசாய பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தாததை சுட்டிக் காட்டும் வகையில் தக்காளி பழங்கள் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது மஃரூப், இக்பால்சேட், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராகிம் ஷா, ஆசாத் அலி, சைய்யது இப்ராகிம், முகம்மது இப்ராகிம், முகம்மது பாருக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் உபைஸ், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.