வேளாண் ௧றுப்பு சட்டங்களுக்கு எதிராக வடசென்னையில் மஜக வினர் போராட்டத்தில் ஈடுடடட்டனர்.! மஜக மாநில செயலாளர் சீனிமுகம்மது துணைசெயலாளர் சமீம் அஹமது ஆகியோர் பங்கேற்பு.!


சென்னை.அக்டோபர்.02.,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டச்செயலாளர் தாரிக் முகமது தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ஆர்.கதிர் உசேன், அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மஜக மாநிலச் செயலாளர் சீனி முஹம்மது, மாநில துணைச்செயலாளர் சமீம் அஹமது ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் அக்பர், மாவட்ட துணைச் செயலாளர் ரசீது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மவுலானா, வட்ட செயலாளர் ஜல்லியில் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
02-10-2020