அக்.02,
மத்திய பாஜக அரசின் வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள வேதை, நாகை சட்டமன்ற தொகுதிகளில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஒருவார கால போராட்டத்தின் இறுதி நாளான இன்று கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மஜக சார்பில் திருப்பூண்டியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? என்பதை விளக்கி மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், சிபிஐ ஒன்றிய செயலாளர் D.செல்வம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி. செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லா, துணை செயலாளர் சபுருதீன், அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், நாகூர் ஜாஹீர், நாகை ஜாஸீம், ரெக்ஸ் சுல்தான், R.M.அக்பர், முபீன், ரியாஸ், மாணவர் இந்தியா பாசித் ஆகியோர் முன்னிலை வகிக்க கிளை செயலாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார்.
இதில் திருப்பூண்டி நிர்வாகிகள் ஹாஜா மொய்னுதீன், சுலைமான், அலி, சாகுல், பாரக், ஜுபைர், உகாசா மற்றும் சமூக ஆர்வலர்களும், விவசாய சங்க பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.