திருச்சி. ஏப்.21., இன்று (21.04.18) திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளோடு பங்கேற்றனர். தலைவர்களின் உருக்கமான உரைகளை கேட்ட பெண்கள் கலங்கினர். ஒரு இந்து சகோதரி கண்ணீர் விட்டு குமுறினார். இன்னொரு பெண்மனி சோகம் கப்பிய முகத்தோடு தன் குழந்தையுடன் வந்து பதாகைகளை ஏந்தி நின்றார். சுற்றுவட்டாரம் எங்கும் வாகனங்களை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இப்றாகிம்ஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், ஜமாத்துல் உலாமா மாநகர செயலாளர் சிராஜுதின் மன்பஈ, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு, கிறஸ்துவ நல்லென்ன இயக்க பொருப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணை செயலாளர்கள் S.M ரபிக், ஷேக் தாவூத், பஷிர், அணி நிர்வாகிகள் சதாம், அப்துல் காதர், J.K காதர், மற்றும்
Tag: MJK Party
காவிரி உரிமை போர் தொடர்கிறது! ஏப்ரல்-27 கல்லணையில் ஒன்றுகூடல்! மே-02 தஞ்சை விமான படைதளம் முற்றுகை!
இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, காவிரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன், விவசாய சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் ஏப்ரல்-27 அன்று காலை 10 மணியளவில் கல்லணையில் பல்லாயிரக்கணக்கான விவாசாயிகளுடன் சென்று 'உறுதி மொழி ஏற்பு ஒன்று கூடல் நடத்துவது' என்றும், அன்றிலிருந்து தொடர் பரப்புரை செய்து, மே-02 அன்று தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அணைவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது! நடைபெற இருக்கும் போராட்டங்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும், விவசாய அமைப்புகளின் ஆதரவையும், பாரதிராஜா தலைமையிலான "தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவையின்' ஆதரவையும் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது
நீதியின் சிகரம் ராஜேந்திர சச்சார் மறைவு! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளியிடும் அறிக்கை..) டெல்லி உயர் நீதிமன்ற முனனாள் தலைமை #நீதிபதி #ராஜேந்தர்_சிங்_சச்சார் (94) முதுமை காரணமாக டெல்லியில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் நேர்மையின் அடையாளமாய், நீதியின் சிகரமாய் தனது பணிக்காலத்தில் வாழ்ந்து சென்றார். அவரது தீர்ப்புகள் யாவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக குடிமக்கள் சுதந்திரத்திற்கான சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுத்தார். அதனடிப்படையிலேயே இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூலம் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராஜேந்திர சிங் சச்சார் இருந்தார். இந்திய முஸ்லிம்களின் வாழ்நிலை, தலித்துகளின் நிலையைவிட மோசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின் ஆதார தகவல்கள் நாட்டையே உலுக்கியது. அந்த அறிக்கை நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு அதன் பல அம்சங்கள் பல மாநிலங்களில் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த 2013 ஆம் ஆண்டு அவரை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பத்திரிக்கையாளர் அத்தேஸ் அவர்களும் உடனிருந்தார். சச்சார் கமிட்டி ஆய்வுக்காக
ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு குடந்தையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!
குடந்தை ஏப்.21., காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஷிஃபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று 20/04/2018 மாலை 6.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை , நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மாநில செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று கண்டன கோஷங்கங்களை முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை வடக்கு 20.04.2018
ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு அந்தியூரில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஈரோடு.ஏப்.20., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக #ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக தலைமையில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது. பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்திய படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹ்மத் பாரூக்,மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை பாரூக், நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி