ஈரோடு.ஏப்.20., காஷ்மீரில் ‘இந்து ஏக்தா மன்ஜ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுதும் போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக #ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக தலைமையில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது.
பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்திய படியே நின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர்.
வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர்.
ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார்.
மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹ்மத் பாரூக்,மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை பாரூக், நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி தங்க மயில்ராஜன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினர் PM.இக்பால், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் வானவில் காதர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாபு, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் நஜிர், நகர செயலாளர் ஷபி, நகர பொருளாளர் மொய்தீன்பேக், நகர துணை செயலாளர் அனீபா, நிசார் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அந்தியூர் அப்பாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_ஈரோடு_மேற்கு_மாவட்டம்
19_04_18