You are here

ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு குடந்தையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!

குடந்தை ஏப்.21., காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஷிஃபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று 20/04/2018 மாலை 6.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை , நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

மாநில செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று கண்டன கோஷங்கங்களை முழக்கமிட்டனர்.

இப்போராட்டத்தில் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை வடக்கு
20.04.2018

Top