ஆசிபாவுக்கு நீதி கேட்டு திருச்சியில் மஜக ஆர்ப்பாட்டம்..! கண்ணீர் சிந்திய இந்து சகோதரிகள்!

திருச்சி. ஏப்.21., இன்று (21.04.18) திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளோடு பங்கேற்றனர்.

தலைவர்களின் உருக்கமான உரைகளை கேட்ட பெண்கள் கலங்கினர். ஒரு இந்து சகோதரி கண்ணீர் விட்டு குமுறினார்.
இன்னொரு பெண்மனி சோகம் கப்பிய முகத்தோடு தன் குழந்தையுடன் வந்து பதாகைகளை ஏந்தி நின்றார். சுற்றுவட்டாரம் எங்கும் வாகனங்களை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இப்றாகிம்ஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், ஜமாத்துல் உலாமா மாநகர செயலாளர் சிராஜுதின் மன்பஈ, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு, கிறஸ்துவ நல்லென்ன இயக்க பொருப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணை செயலாளர்கள் S.M ரபிக், ஷேக் தாவூத், பஷிர், அணி நிர்வாகிகள் சதாம், அப்துல் காதர், J.K காதர், மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுவரை இதே இடத்தில் 5 அமைப்புகள் இதே கோரிக்கைகாக ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்று மஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றது, ஆசிபாவுக்கான அனுதாபம் பெருகி வருவதையே காட்டுகிறது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருச்சி_மாவட்டம்.
21.04.2018