செப்.03,மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 02.09.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கி பேசினார். அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் பி அஜ்மீர் கான் தலைமையில் வகிக்க நெய்வேலி நகர பொருளாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரையாற்றிட மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ பி எம் சலீம், ரியாஸ் ரகுமான், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்டத்தின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம். 02.09.2021
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகளாக பொறுப்பு குழு தலைவராக, S. ஜாவித் த/பெ; ஷாஜஹான் தெற்கு தெரு, சந்தப்பேட்டை, திருக்கோவிலூர். அலைபேசி:9791481733 பொறுப்பு குழு உறுப்பினர்களாக, 1) S.சாதிக் பாஷா த/பெ; சுலைமான் பள்ளிவாசல் தெரு, சந்தப்பேட்டை, திருக்கோவிலூர். அலைபேசி; 9894517678 2) B. ஜாகீர்உசேன் த/பெ; பஷீர் 10/25 வடக்கு தெரு, சந்தப்பேட்டை, திருக்கோவிலூர் அலைபேசி: 9626999388 3) I .இஸ்மாயில், த/பெ; இனாயத்துல்லா பள்ளிவாசல் தெரு, T. எடப்பாளையம் அலைபேசி: 9500770937 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்களுக்கு இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 03.09.2021
மஜக கொள்கை விளக்க அணி மாநிலச்செயலாளர் கோவை நாசர் மரணம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அண்ணன் கோவை .நாசர் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். சமீபத்தில் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வீட்டில் சந்தித்தப் போது, மிகுந்த உற்சாகத்துடன் கட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர் கோவை மாநகராட்சியின் கவுன்சிலராக இருந்த போது எளிமையான அணுகுமுறைகள் காரணமாக அனைவராலும் பாராட்டப் பெற்றார். மஜக தொடங்கப்பட்ட பிறகு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பேரார்வத்துடன் பரப்புரையில் ஈடுபட்டு கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அதுவே அவரை கட்சியின் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளராக உயர்த்தியது. மேடைகளில் கலகலப்பாக பேசி மக்களை ஈர்ப்பதில் கெட்டிக்காரராக வலம் வந்தார். சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழகிடும் அவரது இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. அன்பு மிகுந்த ஒரு மூத்த சகோதரரை நாங்கள் இழந்திருக்கிறோம். அந்த வருத்தம் வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவரது பிழைகளை மன்னித்து மறு உலக வாழ்வில் அவரை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 03.09.2021
டெல்டா மண்டல மஜக செயற்குழு… வாணியம்படி வசீம் அக்ரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்..
செப் 11., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று புறநகர் தஞ்சாவூரில், அய்யம்பேட்டை சாலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது முதல் நிகழ்வாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களுக்கான இரங்கல் தீர்மானத்தை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன் பின் அனைவரும் ஒரு நிமிடம் மெளனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள். பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்களும் வசீம் அக்ரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினர். இரங்கல் தீர்மான விபரம் பின்வருமாறு... மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம்
வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் படுகொலை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர். மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 10.09.2021