மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!

செப்.03,மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 02.09.2021 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்.

அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் பி அஜ்மீர் கான் தலைமையில் வகிக்க நெய்வேலி நகர பொருளாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரையாற்றிட மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ பி எம் சலீம், ரியாஸ் ரகுமான், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்டத்தின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.
02.09.2021