(மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் இரங்கல் அறிக்கை) பேராசியராகவும், பேரறிஞராகவும், கவிக்கோ எனும் புகழ் வார்த்தையாலும் கொண்டாடப்பட்ட கவிஞர் அப்துர் ரஹ்மான் இன்று விடியற்காலை நம்மை பிரிந்து இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். (இன்னாலில்லாஹி) அவர் தமிழ் இலக்கியத்தின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர். தமிழ் கவிஞர்களுக்கு எல்லாம் தாயாக வாழ்ந்தவர். மதுரையில் பிறந்து, வாணியம்பாடியில் வேர்விட்டு, உலகமெங்கும் தன் கவிதைகளால் புகழ் ஈட்டியவர். திராவிட இயக்கப் பற்றாளராகவும், இந்தி திணிப்புக்கு எதிரான போராளியாகவும், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாளராகவும் செயல்பட்டவர். அவரது இலக்கிய உலகம் வித்தியாசமானது. அறிவியல், ஆன்மிகம், வரலாறு, தத்துவம், ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. ஆலாபனை, பால் வீதி, போன்ற அவரது கவிதை தொகுப்புகள் தமிழ் உலகிற்கு முற்றிலும் புதிதானவை. அவர் ஆழ்கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்தார் என்றால் அது மிகையாகாது. கஜல் , ஹைகூ போன்ற கவிதை வடிவங்களை இவர்தான் தமிழில் பிரபலப்படுத்தினார். விருதுகளுக்காகவே எழுதுபவர்கள், விருதுகளை தேடிச் செல்பவர்கள் நிறைந்த இலக்கிய உலகில் இவர் தனித்தன்மை மிக்க கொள்கைவாதியாக இயங்கினார். அவரது உரைநடைகளும் புதுக்கவிதை பூக்களோடு அலங்கரிக்கப்பட்டிருக்கும். படிக்க, படிக்க மணக்கும். அவரது விமர்சனங்கள் நேர்மையாகவும், கூர்மையாகவும் இருக்கும்.
Month:
செங்கம் ஜப்பார் அவர்கள் நல்லடக்க நிகழ்வில் மஜக மாநில செயலாளர்…!
சென்னை.ஜூன்.02., கண்ணியமிகு காயிதே மில்லத் ஷாகிப் அவர்களின் அன்பை பெற்றவரும், இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் பால்வளத் துறை தலைவர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா ஆகியவர்களின் அன்பை பெற்றவருமான செங்கம் ஜப்பார் அவர்கள் இரு தினங்கள் முன்பு இயற்கை எய்தினார்கள். அவரது இறுதி பிரார்த்தனையும், நல்லடக்க நிகழ்விலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடந்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் அ.சாதிக் பாட்சா அவர்கள் மஜக சார்பில் கலந்துகொண்டார்கள். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING 02.06.2017
நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!
இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்களையும் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். பின்பு அவரது அலுவலகத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார். உடன் மஜக மாநில விவசாய அணி செயலாளர் செய்யது முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது சுல்தான், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது , நகர துனை செயலாளர்கள் அப்துல் மஜீது, முஹம்மது ஜாசிம் உடனிருந்தனர். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 02.06.2017
திருச்சியில் மோடிக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம்..! மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் பங்கேற்பு…!!
திருச்சி.ஜுன்.02., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் மத்தியில் ஆளும் பாசிச மோடி அவர்களுக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது M.com அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் அசரப்அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ரஃபிக், ஜம்ஜம் பஷீர், காட்டுர் பஷீர் ஆகியோர், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், சென்னை அன்வர், மாணவர் இந்தியா மொய்தீன் அப்துல்காதர், தொழில் சங்கம் G.K.காதர், அயூப் கான், இளைஞர் அணி தென்னூர் சதாம், ஊடக பிரிவு முஹம்மது அலிசேட் ஆகியோருடன் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்துகொண்டு ஏராளமானோர் கைதாகினார்கள். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருச்சி மாவட்டம். 02.06.2017
மஜகவினர் கோவையில் மோடி உருவபொம்மை எரிக்க முயற்ச்சி 200க்கும் மேற்பட்டோர் கைது !!
கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த முற்றுகை போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை,