மஜகவினர் கோவையில் மோடி உருவபொம்மை எரிக்க முயற்ச்சி 200க்கும் மேற்பட்டோர் கைது !!

image

image

image

image

கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது.

மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த முற்றுகை போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுல்தான் அமீர்,  மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான்,  மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்,  மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் மாவட்ட, பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகள், மாடு மற்றும் இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள்  கலந்துக்கொண்டு கைதாகினர்.

மேலும் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மோடியின் உருவ பொம்மை எரிக்க முயற்ச்சித்து போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறியுடன் விருந்து அளிக்கப்பட்டது!!

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
கோவை மாவட்டம்.
01.06.2017