கோவை.ஜூன்.01., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த முற்றுகை போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜெமீஷா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை,
தமிழகம்
தமிழகம்
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மாணவர் இந்தியா பங்கேற்பு..!
சென்னை.ஜூன்.01., இன்று தலித் கிருத்தவ கூட்டமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் தலித் கிருத்தவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் தலைமை தாங்கினார். பொதுப்பள்ளி மேடை தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆரப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாணவர் இந்தியா சார்பாக மாநிலச் செயலாளர் முஹம்மது அஸாருதீன் பங்கேற்று உரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் முன்னனி தலைவர் இளையராஜா நன்றியுரையாற்றினார். தகவல்; ஊடக பிரிவு மாணவர் இந்தியா, சென்னை. 01.06.2017
செங்கம் ஜப்பார் மரணம் !
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்) நீண்ட காலமாக பொதுவாழ்வில் உற்சாகத்துடன் பயணித்த அண்ணன் செங்கம்.ஜப்பார் அவர்கள் நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது . காயிதே மில்லத் அவர்களின் கரம்பற்றி அரசியலை தொடங்கிய அவர் , 1958-ல் தன்னை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் இணைத்துக் கொண்டு பொதுவாழ்வில் பயணித்தார் . அக்காலத்தில் அவர் உருதுவிலும் , தமிழிலும் ஆற்றும் சொற்பொழிவுகள் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தின . அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞரணி தலைவராக இருந்தபோது , அவரது பேச்சாற்றலை கண்டு ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்தனர். பலர் அவரை வழிகாட்டியாக கருதினர் . ஒருகாலத்தில் ஜனாப் A.K.A.அப்துல் சமது சாஹிப் , ஜனாப் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகியோரின் வரிசையில் அவர் இடம் பெற்றிருந்தார் . கவிதை, நகைச்சுவை, எளிமையான உதாரணங்கள் ஆகியவற்றால் மேடைகளை அலங்கரித்தார் . அவரது பேச்சாற்றல் இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது . அவரது எழுச்சி உரைகள் அவரை 'சிங்கம்' ஜப்பாராக அடையாளம் காட்டியது . உருது மொழி ஆற்றலால் அவர்
மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து மயிலாடுதுறையில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்…
நாகை.ஜூன்.01., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சகோ.N.M.மாலிக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மிஸ்பா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், செம்பனார் கோவில் ஒன்றிய செயலாளர் நிஜாம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், மயிலாடுதுறை ஒன்றிய துணை செயலாளர் நிசார் அஹமது ஆகியோர்கள் முன்னிலை
மாடு விற்பனையில் கட்டுப்பாடு மஜகவின் சார்பில் நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
நாகை.மே.31., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் சார்பாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்த மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் AHM.ஹமீது ஜெகபர் வரவேற்புரையாற்றினர், மாவட்ட பொருளாலர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தின், மாவட்ட அணிச் செயலாளர்கள் தெத்தி ஆரிப், பிஸ்மி யூசுப், ரெக்ஸ் சுல்தான், ஓன்றிய செயலாளர் ஏனங்குடி முஜிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் H. ஷேக் அப்துல்லாஹ் தொடங்கி வைத்தார். மாநில விவசாய அணி செயலாளர் N.செய்யது முபாரக், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜிதீன், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கண்டன உரையற்றினார்கள். மற்றும் நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வேதை நகர செயலாளர் ஷேக் அஹமதுல்லா, திட்டச்சேரி போரூர் செயலாளர் ரிஸ்வான், நாகூர் நகர துனை செயலாளர் இப்ராஹீம், நாகை ஒன்றிய துணை செயலாளர் பாவா சாஹிப் மற்றும் நகர