மாடு விற்பனையில் கட்டுப்பாடு மஜகவின் சார்பில் நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

image

image

image

நாகை.மே.31., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் சார்பாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்த மத்திய  பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் AHM.ஹமீது ஜெகபர் வரவேற்புரையாற்றினர், மாவட்ட பொருளாலர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தின், மாவட்ட அணிச் செயலாளர்கள் தெத்தி ஆரிப், பிஸ்மி யூசுப், ரெக்ஸ் சுல்தான், ஓன்றிய செயலாளர் ஏனங்குடி முஜிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் H. ஷேக் அப்துல்லாஹ் தொடங்கி வைத்தார்.

மாநில விவசாய அணி செயலாளர் N.செய்யது முபாரக்,
மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜிதீன், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கண்டன உரையற்றினார்கள்.

மற்றும் நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வேதை நகர செயலாளர் ஷேக் அஹமதுல்லா, திட்டச்சேரி போரூர் செயலாளர் ரிஸ்வான், நாகூர் நகர துனை செயலாளர் இப்ராஹீம், நாகை ஒன்றிய துணை செயலாளர் பாவா சாஹிப் மற்றும் நகர , ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நாகை நகர பொருளாளர் A.அஜிஸுர் ரஹ்மான் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இதுபோன்று மக்கள் விரோத சட்டங்களை போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
நாகை தெற்கு மாவட்டம்.
31.05.2017