இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்கிற மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து நாடெங்கும் பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாட்டுக்கறி உணவை சென்னை IIT வளாகத்திலுள்ள உணவகத்தில் சாப்பிட்டதற்காக சென்னை ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மனீஷ் குமார் சிங் உட்பட குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மாணவர் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அசை மாணவர் இந்தியா வலியுறுத்துகிறது.
ABVP குண்டர்களை கைது செய்வதோடு மட்டமல்லாமல் அவர்களின் தீவிரவாத நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
உணவு பழக்கத்தின் மூலம் மக்களிடையே பிளவு அரசியலை ஏற்படுத்தும் சங்பரிவார பிஜேபி யின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர் இந்தியா போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
முஹம்மது அஸாருதீன்,
மாநிலச் செயலாளர்,
மாணவர் இந்தியா
சென்னை
31.05.2017