கோவை மஜக நிர்வாகிகளுடன் தெற்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

image

image

கோவை.மே.30., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை மாட்டிறைச்சி  வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மாட்டிறைச்சி தடையால் தற்போது அவர்கள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் 01.06.2017 வியாழன் அன்று மஜக சார்பில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தாங்களும் கலந்துகொள்வதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில்  மாநிலசெயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் பதுருதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் மற்றும் ஆத்துப்பாலம் அபு ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
30.05.2017