ஊரடங்கில் உணவின்றி தவித்த நோயாளிகளின் உறவினர்கள்! இலவசமாக உணவு தயார் செய்து விநியோகித்த மஜக!


ஜூலை.19,
தமிழகமெங்கும் ஞாயிற்றுகிழமை அன்று முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உள்நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் வெளி நோயாளிகள் உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதை அறிந்த திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் சுமார் 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து மாவட்ட செயலாளர் பாபுபாய் தலைமையில் விநியோகம் செய்தனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆழ்வார்தோப்பு காதர், பஜார் பக்ருதின், இளைஞரணி மாவட்ட செயலாளர் புரோஸ் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஷாருக்கான், இளைஞரணி நிசார், ரியாஸ்கான், முகமது ரியாஸ், ஆழ்வார்தோப்பு உசேன், மாமு ஜாகிர் உசேன், இஸ்மாயில் உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.