சிவகங்கை.ஜூலை.19.,
தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும் கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையில் சென்ற மஜக நிர்வாகிகள், இருவரையும் தனி தனியே சந்தித்து குறிப்பிட்ட புகார் மனுவை அளித்தனர்.
இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், இளையான்குடி நகர பொறுப்பாளர்கள் பஷிர் அகமது, சிராஜூதீன் மற்றும் நெய்னா ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்
18-07-2020