ஜூலை:20.,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து மஜக கோவை மாநகர் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் இளைஞரணி சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கரும்புக்கடை, சாரமேடு, சலாமத் நகர், இலாஹி நகர், வள்ளல் நகர், பிலால் எஸ்டேட், பாத்திமா நகர், அல்-அமீன் காலனி, புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட், உக்கடம் பேருந்து நிலையம், உக்கடம் காவல் நிலையம், வின்சென்ட் ரோடு, ஹவுஸிங் யூனிட், பெருமாள் கோயில் வீதி ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள்
ATR.பதுருதீன், அபுதாஹீர், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் இப்ராஹீம், விவசாய அணி மாவட்ட செயலாளர் விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் செய்யது, மற்றும் M.I.அக்கீம், அபு, சுவனம் அபு, அசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
19.07.2020