மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து மஜக முற்றுகை போராட்டம்- 300 க்கும் மேற்பட்டோர் கைது…

image

image

image

image

image

சென்னை.மே.30., இன்று  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை மவுண்ட் ரோடு, அண்ணா சாலையிலுள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது.

மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் வே.மதிமாறன், பகுஜன் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள்  கலந்துக்கொண்டு கைதாகினர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சென்னை.
#MJK_IT_WING
30.05.2017