(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசுக் கெதிராக கண்டனக் குரல்கள் எழுப்பி வரும் சூழ்நிலையில் மே-17 இயக்கமும் பல்வேறு இடங்களில் ஈழம் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம்.
அந்த அடிப்டையில் கடந்த மே-17 அன்று முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக தோழர் திருமுருகன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வை மே-17 இயக்கம் சென்னை மெரினாவில் நடத்தியது.
இதே போன்று மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மே-17 இயக்கம் பல்வேறு வடிவங்களில் எதிர்த்து வந்தது.
இந்நிலையில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்திய திருமுருகன், அருண்குமார் , இளமாறன் மற்றும் டைசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக ஆர்வலரும் , மனித உரிமை களத்தில் தொடர்ந்து போராடி வருபவருமான திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்பதும், மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதும் சமூக நல ஆர்வலர்களின் அடிப்படை உரிமை.
இந்நிலையில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை ஏவியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே தமிழக அரசு திருமுருகன் உள்ளிட்ட நால்வர் மீது போட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவண் ;
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.
மாநில பொருளாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
29.05.2017