(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)
மதசார்ப்பற்ற இந்தியாவை
படுகுழியில் தள்ளும் பாதகபோக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக இப்போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறார்கள்.
இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகள் சந்தையில் விற்ககூடாது என்றும், அறுக்ககூடாது என்றும், திருவிழா காலங்களுக்கு இது பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
இது மாட்டிறைச்சியை அன்றாடம் உண்ணும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள்,தலித் மக்கள் ஆகியோரின் உணவு உரிமையை அப்பட்டமாக பறிக்கும் செயலாகும்.
ஒருவர் எந்தமாதிரியான
உணவுகளை உண்ணவேண்டும் என்பதை கூட ஒரு அரசுதான் தீர்மானிக்கும் என்றால், அந்த அரசு சர்வாதிகார அரசாகத்தான் இருக்கமுடியும்.
உலக நாடுகள் முழுக்க சுற்றிவரும் பிரதமர் நரேந்திரமோடி உலகின் பண்முக கலாச்சாரத்தையும், தனிமனித உரிமைகளையும்,
கூட்டு சமூகங்களின் பண்பாடுகளையும் அறியாமல் போனது வியப்பளிக்கிறது.
பிற்போக்கு அமைப்பான RSSன் திட்டங்களை அவர் செயல்படுத்தி, இந்தியாவின் பாரம்பரிய உணர்வுகளையும் இனக்கமான சூழலையும் பாழ்படுத்த முயன்றிருக்கிறார்.
நரேந்திரமோடி பிரதமராக வந்த பிறகுதான் இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது.
அதை ஏற்றுமதி செய்யும்
முதலாளிகள் பெரும்பாலோர் குஜராத்திகள். இல்லையென்றால் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடைவிதித்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பார்களோ? என்ற கேள்வி எழுகிறது.
நம்நாட்டில் இந்துக்களும்,
முஸ்லிம்களும்,கிருத்தவர்களும் ஏனைய சமூகத்தினரும் தங்களது மத பண்டிகைகளின் போது கால்நடைகளை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இப்போதைய மத்திய அரசின் அறிவிப்புபடி அரசியல் சாசன சட்டம் பிரிவு 25 மிருகவதை தடைசட்டம் பிரிவு28 ஆகியவற்றிக்கு கேடு விளைவிக்கிறது.
எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகளோடு
இணைந்து எதிர்போராட்டங்களை நடத்துவோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் உணர்வுகளை மதித்து கேரளா, மேற்கு வங்காளம், மிஜோராம் ஆகிய மாநிலங்களைப் போல் தமிழக அரசும் இந்த அறிவிப்பை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்.
M.தமிமுன் அன்சாரிMLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
26.05.2017