நாகை.ஜூன்.01., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது.
மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சகோ.N.M.மாலிக் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மிஸ்பா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், செம்பனார் கோவில் ஒன்றிய செயலாளர் நிஜாம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், மயிலாடுதுறை ஒன்றிய துணை செயலாளர் நிசார் அஹமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல்துறை பணியாற்றிய சகோ.ராஜசேகரன், பார்வேடு பிளாக் கட்சி சகோ.குணசேகரன், சகோ.பேராசிரியர் முரளி, சகோ.ரெயில்வே ராம முர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்கள்.
மேலும் ஒன்றிய, நகர, கிளை, வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
நாகை வடக்கு மாவட்டம்
#MJK_IT_WING
31.5.2017