(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகிறது. பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோவில், மாணவிகளை பாலியல் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்ததும், அதில் கவர்னர் பெயரை சொல்லியிருப்பதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்க்குள் தி வீக் பத்திரிகையின் பெண் நிருபரை கண்ணத்தில் தட்டிக் கொடுத்திருப்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விரு சம்பவங்களும் கவர்னரின் நன்மதிப்பை மக்கள் மத்தியில் குலைத்திருக்கிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காததும், தேர்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு போட்டியாக தன்னிச்சையாக ஆய்வுகளை நடத்துவதும் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. எனவே, தொடர்ந்து சர்சைகளில் சிக்கி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 18.04.18
தமிழகம்
தமிழகம்
வேலூரில் மஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
வேலூர்.ஏப்.17., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி 2_ம் மண்டல செயலாளர் சையத் கலீம் தலைமையில் நடைப்பெற்றது. 3_ம் மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், ஷேக் இம்ரான், அஸ்கர் அலி, ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன், மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர், இளைஞர் அணி துணை செயலாளர் சாதிக், 30வது கிளை துணை செயலாளர் அமானுல்லாஹ், அப்சர் பாஷா, முஜாயத், சல்மான் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 17.04.2018
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக ஆனைமலை நகர செயல்வீரர்கள் கூட்டம்..! தன்னெழுச்சியுடன் இணைந்த மாணவர்கள்..!!
கோவை.ஏப்.17., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆனைமலை நகர #செயல்_வீரர்கள்_கூட்டம் நகர செயலாளர் கெய்ஸர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனைமலை A.காஜா, மாவட்ட துணை செயலாளர் K.U.முஸ்தபா, PM.முகம்மதுரபீக் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் #சிறந்த_ஊராட்சி என தேர்வு செய்து ஜனாதிபதி விருது பெற்ற தாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் #அப்புவீரன் அவர்கள் தலைமையில் பலர் கட்சியில் இணைந்தனர்.இக்கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.பொள்ளாச்சி நகரம் சார்பாக நகர செயலாளர் A.ராஜாஜெமீஷா, நகர பொருளாளர் JS.நாசர் மற்றும் மாவட்ட அணி, நகரம், பகுதி, ஒன்றியம், வார்டு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தகவல்#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_கோவை_மாவட்டம்15.04.18
ஆசிபாவுக்கு நீதி கேட்டு மஜக ஆர்ப்பாட்டம்! உணர்ச்சிவசப்பட்டு முழக்கம் எழுப்பிய போலீஸ்காரர்!
சென்னை. ஏப்.16., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் #நீதிகேட்டு_போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழங்கியபோது , உணர்ச்சி வசப்பட்ட ஒரு போலீஸ்காரர் அவரும் முழுக்கம் எழுப்பி கலங்கினார். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர். அதில்'அடுத்தது நாங்களா மோடி' என்ற வாசகம் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சாலை வழியே சென்ற பொது மக்களும் அப்படியே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் கப்பிய முகத்தோடு நின்றனர். இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு MLA, இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா, சமாஜ்வாடி கட்சி தலைவர் டெல்டா விஜயன், பாரத மக்கள் இயக்கத்தை சேர்ந்த உமாராணி, மஜக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S அலாவுதீன், மாநில
காவிரி போராட்டக்காரர்களை விடுதலை செய்க ! தமிழக முதல்வருடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்திப்பு!
சென்னை.ஏப்.16., இன்று (16-04-2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது காவிரி உரிமைக்காக போராடிய மஜக மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது மற்றும் நிர்வாகிகள் 6பேர்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஜுன் 12 தேதிக்குள் குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் தேவை என்பதால், தமிழக அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், வலியுறுத்தினார். மேலும் தூத்துக்குடி ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டம், நியுட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் ஆகியவை குறித்தும், அதில் தமிழக அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தங்களது கருத்துகளை நிச்சயம் பரீசீலிப்பதாக தமிழக முதல்வர் பதிலளித்தார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம்_சென்னை 16.04.2018