திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தில் மஜகவின் முப்பெரும் விழா..!

image

image

image

image

திருப்பூர்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் D.காளிபாளையத்தில் நேற்று மாலை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு, தெருமுனை பிரச்சாரம்
கொடியேற்றுவிழா ஆகிய
மூன்று நிகழ்ச்சிகளும்
வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு மஜக மாவட்ட செயலாளர் திருப்பூர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகிக்க,

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மஜக மாநில செயற்குழு உறுப்பினர் பெங்களூர் K.M.J.பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அடுத்ததாக உரையாற்றிய
திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள். நெருப்பில் பூத்த புரட்சி மலராம் மஜக தோன்றிய காரணங்களையும், அது குறுகிய காலத்தில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று வெற்றி வாகை சூடி வருவதையும்
எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தாராபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

கொடியேற்றம் நிகழ்வு ஊர்பெரியவர்கள் முன்னிலையில்  ஊரின் முக்கிய சந்திப்பில் பொதுமக்களின் ஆதரவோடு
கரவொலிக்களுக்கு மத்தியில்
மாவட்ட செயலாளர் ஹைதரலி அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள்.

அதன் பின் நடந்த நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சியில் தாராபுரம்  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்
D.காளிபாளையம் கிளை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன் விபரம் பின் வருமாறு..

தாராபுரம் ஒன்றிய செயலாளராக சகோ.J.அசாருதீன் அவர்களும்.

D.காளிபாளையம் கிளைச் செயலாளராக சகோ.S.சிராஜ்தீன் அவர்களும்.

கிளைப் பொருளாளராக
சகோ.M.ஃபிரோஸ் அவர்களும்

துணைச் செயலாளர்களாக
சகோ.தகபத், சகோ. A.அசரப் அலி சகோ.ராம் குமார் ஆகியோர்,

கிளை இளைஞர் அணி செயலாளராக சகோ.S.நஸ்யர் தீன்

கிளை இளைஞர் அணி துணைச் செயலாளராக சகோ.ஜுல்பர் அவர்களும்.

ஆகிய அனைவரும் தலைமையின் ஒப்புதலோடு
மாவட்ட செயலாளர் நியமனம் செய்தார்.

இறுதியாக கர்நாடக மஜக நிர்வாகிகள் J.சல்மான் வாழ்த்துரை வழங்க, ஹக்கிம் சேட் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் வானவில் காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான், திருப்பூர் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

குறிப்பாக கர்நாடக மஜகவினர்
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
01_09_2017