(மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் சமூக வலைதள பதிவு..)
இந்திய குடியரசு கட்சியின் (கவாய்) முன்னாள் பொதுச் செயலாளரும், சமூக நீதி போராளியுமான டாகடர்.அ.சேப்பன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், பிற்படுத்தப்பட்டோர், சிறும்பான்மையினர் உள்ளிட்ட அனைவரின் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட போராட்டவாதி அவர்.
தன்னை தேடி வரும் நோயாளிகளுக்கு 10 ரூபாயில் வைத்தியம் பார்த்த மனிதநேயர்.
டாக்டர்.ராமதாஸ், ஷஹீத் பழனிபாபா உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து அவர் நடத்திய சமூக நீதிக்கான போராட்டங்கள் மறக்க முடியாதவை..
” புராண விடுதலை பெற இஸ்லாமிய மார்க்கமே தீர்வு ” என்ற அவரது நூல் தமிழ் சிந்தனை உலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
வயது முதிர்ச்சியால் காலங்களில் இருந்து ஒதுங்கியிருந்தவர் இன்று நம்மிடம் விடைபெற்றிருக்கிறார். அவரது பணிகளை சமூக நீதி போராளிகள் முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்.
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01.09.17