வேலூர்.அக்.27., கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையா விட்டாலும், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளரும், முன்னாள் வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான S.S.ஹாரூன் ரசீது அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், (பொதுமக்கள் கோரிக்கைகளில்) ஒன்று "வேலூர் ஓல்டு டவுன் குடிநீர் தேக்க தொட்டி பராமரிப்பு". வேலூர் சார்பனமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த குடிநீர்தேக்கத் தோட்டி பல்லாயிரக்கணக்கான, ஏறத்தாழ 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் ஜீவாதாரமாக திகழ்ந்து வருகின்றது. மேற்கண்ட குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமறிப்பற்ற நிலையிலும், நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியும், நீர்தேக்க தொட்டி திறந்த நிலையிலும், இத் தொட்டியின் உள் புறத்திலும், வெளிப்புறத்திலும் கோடிக் கணக்கில் கொசுக்கள் இருப்பதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் குடிநீராக உபோயோகிக்கும் இந் நீர் தேக்க தொட்டி மாநகராட்சியின் நிர்வாக அலட்சியப்போக்கால் குடிநீர் மாசடைந்துள்ளது. தமிழகத்தையே அச்சுறுத்துகின்ற டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற ஆட்கொல்லி நோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியதை உணர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் S.S.ஹாரூன் ரசீது அவர்களின்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! தென்காசியில் மஜக பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சி
நெல்லை.அக்.22., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (22_10_17) பெரும் எழுச்சியோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு இம்மாவட்டத்தில் புளியங்குடிக்கு அடுத்தப்படியாக தற்போது இரண்டாவதாக தென்காசியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதன் மூலம் மஜகவின் மக்கள் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஊரெங்கும் மஜக கொடிகள், வரவேற்பு பதாகைகள், போஸ்டர்கள், பேனர்கள் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில், தமுமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் புளியங்குடி.செய்யது அலி தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி, மாநில செயலாளர் தைமிய்யா உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளை திரளான மக்கள் கூட்டத்தை தாண்டியும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மக்கள் பேரார்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான், மாநிலத் துணைச் செயலாளர்கள் கோவை.பஷீர், தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் வானவில் காதர், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்
சென்னை துறைமுகம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..! மஜக மாநில பொருளாளர் துவங்கி வைத்தார்..!!
சென்னை.அக்.15., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி (57, 60 ) வட்டத்திற்குட்பட்ட 2 இடத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரசிது M.Com., அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இம்முகாமில் மாவட்ட செயலாளர் A. முஹம்மது ஹாலித் M.Com., திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளர் நாசர், து.செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணி செயலாளர் முஸாகனி, IKp பொருளாளர் தீன் பாய்,பகுதி செயலாளர் சீனி முஹம்மது, பகுதி பொருளாளர் காஜா, துணை செயலாளர் ஜினைத் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் ஷாகுல், எழும்பூர் பகுதி பொருளாளர் கலாம் மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK-IT-WING 57,60 வது வட்டம், துறைமுகம் பகுதி, மத்திய சென்னை மாவட்டம்.
சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர்கள் மஜகவில் இணைந்தனர்.
வேலூர்.அக்.10,.மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டம் நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. பொறுப்புக்குழு உறுப்பினர் ஆம்பூர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் நகரம் முழுவதும் கிளைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர் நபீஸ் தலைமையில் சில சகோதரர்கள் உறுப்பினர் படிவத்தை நிரப்பி தன்னேழுச்சியாக மஜகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் SMD.நவாஸ், S.M.,ஷாநவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம்
PFI மாநாட்டில் மஜக மாநில பொருளாளர் சிறப்புரை..!
சென்னை.அக்.09., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக நேற்று 08.10.2017 மாலை 4.00 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது. M.Com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாசிசத்திற்கு எதிராக எழுச்சி உரை நிகழ்த்தினார். இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, அமீர் அப்பாஸ், துறைமுக பகுதி செயலாளர் குப்பை சீனி, துறைமுக பகுதி துணைச் செயலாளர் பஜார் அபூபக்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் துணைச்செயலாளர் M.பக்ருதீன் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 08.10.17